October 3, 2022

8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி
கடந்த ஜூலையில் 4.5 சதம் சரிவு

புது தில்லி, செப்.1.

நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூலை மைதம் 4.5 சதவீதமாக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 4.5 சதவீதமாக குறைந்தது. இது ஆறு மாதங்களில் இல்லாத மிகப் பெரிய சரிவாகும். கடந்த ஆண்டின் ஜூலையில் அந்தத் துறைகளின் உற்பத்தி 9.9 சதவீதமாக இருந்தது.

இந்த உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 13.2 சதவீதமாகவும், மே மாதத்தில் 19.3 சதவீதமாகவும், ஏப்ரலில் 9.5 சதவீதமாகவும், மார்ச்சில் 4.8 சதமாகவும், பிப்ரவரியில் 5.9 சதமாகவும், ஜனவரியில் 4 சதமாகவும் அதிகரித்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love