September 27, 2022

7 சதத்துக்கும் மேல் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் இருக்கும்: ஆனந்த் நாகேஸ்வரன்

மும்பை, செப்.21

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 சதத்துக்கு மேல் இருக்கும் என, தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பட்ஜெட்டுக்கு முன்னதாக, கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8 – 8.5 சதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்பிஐ, தற்போது வளர்ச்சி 7.2 சதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. சில ஆய்வாளர்கள் 7 சதத்துக்கும் குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொருளாதார ஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன் நாட்டின் வளர்ச்சி 7 சதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதத்துக்கும் அதிகமாக இருக்கும். கொரோனா தொற்று நோய், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவற்றின் பின்விளைவுகளை உலகம் இன்னும் அனுபவித்து வருகிறது. இத்தகைய காரணிகள் வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love