புது தில்லி, டிச.6
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஒய் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன் சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் கிரெ வெர்சன் ஸ்மூத் சர்ஃபேஸ் கைரேகைகளை பதிய விடாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் கீறல்களை தாங்கும் அளவுக்கு உறுதியாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ஏராளமான டெஸ்டிங் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய விவோ ஒய்02 ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே மற்றும் ஆர்சிட் புளூ என இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.