December 9, 2022

5 வடகிழக்கு நகரங்களுக்கு புதிய விமானங்கள் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

புது தில்லி, அக்.31

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் விமான போக்குவரத்து தற்போது மீண்டும் எழுச்சி பெற்றது என்பதும் புதிய விமானங்கள் புதிய வழித்தடங்களில் விமானங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு சமீபத்தில் ஏராளமான புதிய விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 5 முக்கிய நகரங்களை இணைக்கும் மூன்று விமானங்களை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரங்களை இணைக்கும் ஒரு பகுதியாக இந்த விமான போக்குவரத்து புதிதாக தொடங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களை இணைக்கும் மூன்று விமானங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இம்பால்-ஐஸ்வால்-இம்பாலை இணைக்கும் விமானம் அக்டோபர் 30 முதல் முதல் வாரத்திற்கு 5 முறை இயக்கப்படும் என்றும், ´ல்லாங்-லிலாபரி-´ல்லாங்க் இடையே அக்டோபர் 31 முதல் விமான சேவை வாரம் 4 முறை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லிலாபரி-ஜிரோ-லிலாபரி வழித்தடத்தில் அக்டோபர் 30 முதல் வாரத்திற்கு 2 முறை இயக்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது. அலையன்ஸ் ஏர் மூலம் விமானங்கள் இயக்கப்படும் இந்த சேவை காரணமாக வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் இருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விமான இணைப்பை வழங்கும் தொடக்கமாகும் என்று சிந்தியா வலியுறுத்தினார்.

Spread the love