October 4, 2022

5 லட்சம் விற்பனையைக் கடந்தது ஹோண்டா அமேஸ்

சென்னை, செப்.8

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அமேஸ் ரகக் கார்களின் விற்பனை 5 லட்சத்தைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹோண்டா நிறுவனத்தின் சிறிய வகை செடான் பிரிவு காரான அமேஸின் விற்பனை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த கார் தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் நிறுவனத்தின் தயாரிப்பாக உள்ளது. அமேஸ் கார்கள் நிறுவனத்தின் விற்பனையில் 40 சதம் பங்கு வகிக்கின்றன. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் அமேஸ் ரகக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மாறும் தலைமை நிர்வாக அதிகாரி டகுயா சுமூரா தெரிவிக்கையில், இந்தியச் சந்தையைக் கவர்வதற்கான எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாகவும், எங்கள் வணிகத்தின் முக்கியத் தூணாகவும் ஹோண்டா அமேஸ் விளங்குகிறது. பெரிய நகரங்களில் மட்டுமன்றி சிறிய நகரங்களிலும் அதற்கு நல்ல வரவேற்பு இருப்பது, பிரீமியம் செடான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அது சிறந்த முறையில் நிறைவேற்றுவதை உணர்த்துகிறதுஎன்றார்.

Spread the love