November 29, 2022

5ஜி தொலைத் தொடர்பு சேவை வழங்க ஜியோ- ஓப்போ நிறுவனம் இடையே ஒப்பந்தம்

மும்பை, நவ.17

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வழங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் ஒப்போ நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் இனி அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஒப்போ கைப்பேசிகளும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றிருக்கும். ஜியோவின் தனித்துவ 5ஜி சேவையைப் பெறும் வகையில், எங்களது ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 7, எஃப்21 ப்ரோ 5ஜி, எஃப்19 ப்ரோ ப்ளஸ், கே10, ஏ53 ஆகிய கைப்பேசிகளின் மென்பொருள்கள் தரமேற்றம் செய்யப்படுகின்றன.

இதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love