December 9, 2022

43 இன்ச் புதிய பிரேவியா டிவி: சோனி அறிமுகம்

புது தில்லி, அக்.31

சீனா நிறுவனங்களின் டிவிகளுக்கு போட்டியாக 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை கொண்டுவந்தது சோனி நிறுவனம். குறிப்பாக மற்ற அனைத்து டிவிகளை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சோனி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

43-இன்ச் பிரேவியா ஸ்மார்ட் டிவி 2022 மாடல் ஆனது ஃபுல் எச்டி எல்இடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x1080 பிக்சல்ஸ் மற்றும் 60 யஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

டால்பி ஆடியோ மற்றும் அலெக்ஸா காம்பெடிபிலிட்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி மாடல். மேலும் ஒபன் பவெல் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது.

வாய்ஸ் சர்ச், க்ரோம் காஸ்ட் ஆதரவு, கூகுள் டிவி, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் ஹோம் கிட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைவழங்குகிறது.

அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆப்ஸ்களைஇந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் எடை 7.7கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.42,740-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியை அமேசான் தளத்தில் வாங்க முடியும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகை, இஎம்ஐ வசதியை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love