December 8, 2022

43 இஞ்ச் டிவிக்கு தள்ளுபடியை அறிவித்தது டிசிஎல்

மும்பை, நவ.11

பிளிப்கார்ட் தளத்தில் டிசிஎல் எஸ்6500 சீரிஸ் புல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 58 சதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.47,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக சிறந்த அம்சங்கள் கொண்ட 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

இந்த டிசிஎல் எஸ்6500 சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 மு 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 320 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். எச்டிஆர் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல் பிரகாசமான வண்ணங்களுடன் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு கேமிங் செயலிகளை கூட இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிசிஎல் எஸ்6500 சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்.

Spread the love