December 9, 2022

4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சிஸ்கோ முடிவு

புது தில்லி, நவ.21

உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேசன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ நிறுவனம், தனது வர்த்தகத்தையும், நிதி நிலையையும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் தனது மொத்த ஊழியர்களில் 5 சதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியான தகவல்கள் படி சிஸ்கோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 83,000 ஊழியர்களை வைத்துள்ள நிலையில் 5 சத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் சுமார் 4100 பேர் தங்களது பணியை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அதிகம் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சிஸ்கோ நிறுவனம் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஸ்கோவின் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் அடுத்த அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது.

சிஸ்கோ நிறுவனம் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 13.6 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும், இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6 சதம் அதிகமாகும். தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாகவும், உலகளவில் ஏற்பட்டு உள்ள வர்த்தகச் சரிவைக் காரணம் காட்டி தற்போது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Spread the love