பெங்களூரு, நவ.30
உலகம் முழுவதும் பெரிய டெக் நிறுவனங்கள் முதல் சிறிய டெக் நிறுவனங்கள் வரையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பல முன்னணி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், வர்த்தகம் குறைந்துள்ள காரணத்தாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் இறங்கியுள்ளது.
அப்படி இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாட் மூலம் ஊழியர்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் ஹைரெக்ட் என்னும் நிறுவனம் சுமார் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாக அறிவித்து நிறுவனத்தில் 40 சத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் குறைந்தது 200 பேர் தங்களது பணியை இழக்க நேரிடும்.
கொரோனா காலத்தில் அதிகளவிலான ஊழியர்களை வர்த்தகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியில் அமர்த்திய நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் உலக நாடுகளை ரெசினுக்குள்ள தள்ளும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மெட்டா முதல் தற்போது ஹைரெக்ட் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. ஹைரெக்ட் தற்போது தனது வர்த்தக மாடலை மொத்தமாக மறுசீரமைப்புச் செய்து வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கை மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது என ஹைரெக்ட் சிஇஓ ராஜ் தாஸ் இந்தப் பணிநீக்கம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.