September 27, 2022

40 ஆண்டுகள் நிறைவு செய்த மாருதி சுசூகி கூட்டணி
2025ல் மின்வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டம்

புது தில்லி, செப்.12

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்பரேசனுடன் இணைந்து 40 ஆண்டுக்கால கூட்டணியை நிறைவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

மாருதி உத்யோக் மற்றும் சுசூகி இடையேயான கூட்டணி பிப்ரவரி 24, 1981ல் தொடங்கியது. இக்கூட்டணியில் உருவான மாருதி சுசூகி நிறுவனம் 1983ல் மாருதி 800 உடன் தனது உற்பத்தியைத் தொடங்கியது.

மாருதி சுசூகி நிறுவனம் அதன் ஆரம்ப நாட்களில், ‘மலிவு விலையில் கார் தயாரிப்பாளராக’ அறியப்பட்டது. பின்னர், இம்நிறுவனத்தின் கார் தயாரிப்பு சொகுசு பிரிவை நோக்கி மாறியது இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தான். மாருதி சுசூகி ஆடம்பர பிரிவுக்காகக் கிசா´ மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது.

மாருதி சுசூகி கார்கள் என்றாலே பட்ஜெட் கார்கள் எனப் பெயர் பெற்றுள்ளது. இந்தக் கார்களின் சர்வீஸ் கட்டணங்களும் மிகவும் குறைவு என்பதால் ரிட்டன் வேல்யூ-வும் அதிகம்.

மாருதி சுஸுகி இந்தியா தனது முதல் மின்சார வாகனத்தை 2025 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வரும் என்று மாருதி சுஸுகி இந்தியாவின் சிஇஓ ஹிசா´ டேகுச்சி சமீபத்தில் தெரிவித்தார். நிறுவனம் இந்தியாவில் 50 மின்சார வேகன் ஆர் யூனிட்களைச் சோதனை செய்து வருகிறது. மாருதி சுசூகி இந்தியாவில் 2025 முதல் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காகப் புதிதாக ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா-வில் நிறுவ உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் சுசூகி தனியாகச் சொந்த முதலீட்டில் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர்-ல் அமைக்க உள்ளது. இது 2026 முதல் செயல்படத் துவங்கும்.

Spread the love