February 3, 2023

4ஜி ஸ்மார்ட்போன் லாவா நிறுவனம் அறிமுகம் செய்தது

மும்பை, நவ.26

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: லாவா பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பிளேஸ் என்எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார், விஜிஏ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா பிளேஸ் என்எக்ஸ்டி ஸ்மார்ட்போன் கிலாஸ் கிரீன், கிலாஸ் ரெட் மற்றும் கிலாஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான், லாவா வலைதளங்களில் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் லாவா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்த இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறது

Spread the love