January 23, 2023

385 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது வேதாந்து

பெங்களூரு, டிச.8

இந்தியாவின் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போதும் இந்த பணி நீக்கமானது தொடர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டைகர் கு¼ளாபல் பின்னணியில் உள்ள வேதாந்து இன்னோவேசன் பிரைவேட் லிமிடெட் கொரோனாவுக்கு பிறகு, வளர்ச்சியினை அதிகரிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றது. எனினும் தேவை சரிவானது இருந்து வரும் நிலையில், செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த செலவின் குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.

பெங்களூரு அடிப்படையிலான வேதாந்து நிறுவனம் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 11.6% அல்லது 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதற்கான இழப்பீடினையும் அறிவித்துள்ளது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்களுக்கான அடுத்த கட்ட வேலையினை தேட பயனுள்ளதாக இருக்கும் என அறிவித்துள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தில் 3300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். வேதாந்துவின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் யஹச் ஆர் மற்றும் விற்பனை பிரிவு, கற்றல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த எட்டெக் யூனிகார்ன் நிறுவனம் பல கட்டமாக பணி நீக்கம் செய்து வருகின்றது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. கடந்த மே மாதம் 424 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 100 பேரை பணி நீக்கம் செய்தது. தற்போது கிட்டதட்ட 400 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

Spread the love