October 4, 2022

3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெர்சிடஸ் பென்ஸ்

புது தில்லி, செப்.9

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் சமீபத்தில் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ மாநிலத்தில் செயல்படும் டிரக் மற்றும் பஸ் சேஸ் ஆலையை மறுசீரமைக்க இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவிக்கையில்,

மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையில் காரின் முன் அச்சுகள் மற்றும் நடுத்தர டிரான்ஸ்மிசன்களின் உற்பத்தி செய்யபப்டுகிறது. மேலும் காரின் தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் அவுட்சோர்ஸ் மூலம் செய்து வருகிறது. மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையின் மறு சீரமைப்புக்கு பின்னர் பஸ் சேஸ் மற்றும் டிரக்குகளின் உற்பத்தியில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் பிரேசில் ஆலையில் இருந்து 2,200 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், மேலும் கூடுதலாக 1,400 ஊழியர்களின் தற்காலிக ஒப்பந்தங்கள் டிசம்பர் வரை புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love