February 3, 2023

32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்
மக்களைவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி, டிச.9

உஜ்வலா திட்டத்தின் கீழ் 9.6 கோடிகள் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு தற்போது நாட்டில் 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பதாக மக்களைவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மக்களைவையின் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் புரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது: 2014ம் ஆண்டு இந்தியாவில் வெறும் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தன. 2016ம் ஆண்டு உஜ்வலா திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் புதிதாக 9.6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு நாட்டில் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.

சமையல் எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து சமூக வலைதளங்களில் பிரசாரமும், பொது மக்களிடையே நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆண்டுக்கு 12 முறை வரை ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை 303 சதமாக உயா?ந்தபோதிலும் இந்தியாவில் 28 சதத்துக்கு மேல் உயர்த்தப்படவில்லை. மேலும் ஓர் ஆண்டுக்கு, சராசரியாக ஒரு குடும்பம் சார்பாக 3 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டது தற்போது 3.69 சிலிண்டராக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

Spread the love