September 27, 2022

25 ஏர் பஸ்கள் மற்றும் 5 போயிங்
விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டம்

மும்பை, செப்.13

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கிய டாடா நிறுவனம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 25 ஏர் பஸ்கள் மற்றும் 5 போயிங் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஏர் இந்தியா நிறுவனம் தனது திறனை அதிகரிக்க 25 ஏர்பஸ்கள் மற்றும் 5 போயிங் வைட்பாடி விமானங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 25 ஏர்பஸ் நேரோ-பாடி மற்றும் 5 போயிங் வைட்-பாடி விமானங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டுள்ளதாகவும், அவை 2022ஆம் ஆண்டின் இறுதியில் சேவையை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் 21 ஏர்பஸ் ஏ320 நியோக்கள், நான்கு ஏர்பஸ் ஏ321 நியோக்கள் மற்றும் ஐந்து போயிங் பி777-200எல்ஆர்கள் ஆகியவற்றை இணைத்தது. ஏர் இந்தியா நிறுவனம் அளித்த தகவலின்படி பி777-200எல்ஆர் வகை விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்படும் என்றும், இந்திய மெட்ரோ நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் வழிகளில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியபோது, நான்கு பு321 விமானங்கள் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏர் இந்தியாவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், 21 பு320 2023 விமானங்கள் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய விமானங்களை இணைப்பது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: நீண்ட காலத்திற்கு பின் ஏர் இந்தியா தனது உலகளாவிய சேவையை மீண்டும் விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி என்றும், இந்த புதிய விமானங்களின் திறன் முழுமையாக பயணிகளை திருப்தி செய்யும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

Spread the love