February 3, 2023

2047ல் பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக
வளர்ச்சியை எட்டும்: முகேஷ் அம்பானி தகவல்

மும்பை, நவ.23

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருக்கிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து 13 மடங்கு அதிகரித்து, 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்திகளாக, சுத்தமான ஆற்றல் புரட்சி , உயிரி ஆற்றல் புரட்சி மற்றும் டிஜிட்டல் புரட்சி என இவை மூன்றும் தான் இருக்கப்போகிறது என தெரிவித்தார்.

மேலும், சுத்தமான ஆற்றல் உள்ள புரட்சியும், உயிரி ஆற்றல் புரட்சியும் நமக்கு தேவையான நிலையான ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே வேளையில், டிஜிட்டல் புரட்சியானது ஆற்றலை திறம்பட பயன்படுத்த நமக்கு உதவும். இந்த மூன்று புரட்சிகளும் இணைந்து இந்தியாவையும் உலகையும் காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும் என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருப்பதாக தெரிவித்த அவர், தற்போது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருக்கும் இந்தியா, 2047 ஆம் ஆண்டில் 40 டிரில்லியன் டாலர்களை கொண்டுள்ள நாடாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சி, இந்தியாவை டாப் 3 பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக நிலைபெறச்செய்யும் என அவர் தெரிவித்தார்.

Spread the love