October 4, 2022

2040ம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இலக்கு

புது தில்லி, செப்.6

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட பிபிசிஎல் இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிபிசிஎல் நிறுவனத்தின் தலைவர் அருண் குமார் சிங் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைத்து, வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்¼ளாம். அதற்காக, தற்போது 50 மெகாவாட்டாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 2025ம் ஆண்டில் 1 ஜிகாவாட்டாகவும் 2040ம் ஆண்டில் 10 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்க முடிவு செய்துள்¼ளாம் என்றார் அவர்.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிர்ணயித்துள்ளன.

Spread the love