November 29, 2022

2035 முதல் புதிய பெட்ரோல் – டீசல் கார்களுக்கு தடை ஐரோப்பா யூனியன் முடிவு

புது தில்லி, அக்.29

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் புதிய உள்ளெரி என்ஜின் கார்களின் விற்பனைக்கு வரும் 2035-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, 55 இலக்குக்கான திட்டம்’ என்ற தலைப்பில் ஓர் உடன்படிக்கையை உறுப்பு நாடுகள் அண்மையில் மேற்கொண்டன.

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 2030ம் ஆண்டுக்குள் 55 சதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உள்யளரி என்ஜின் கார் தடை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், காற்றில் கலக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவை 2030ம் ஆண்டுக்குள் 55 சதமும், 5 ஆண்டுகள் கழித்து முழுமையாகவும் வாகனத் தயாரிப்பாளர்கள் குறைக்க உறுப்பு நாடுகள் உத்தரவிடவேண்டும்.

Spread the love