September 27, 2022

2032ம் ஆண்டில் ஆறாவது பெரிய சந்தையாக இந்திய காப்பீடு துறை விளங்கும்: ஆய்வுத்தகவல்

புது தில்லி, செப்.5

இந்திய காப்பீடு துறை வளர்ச்சி அடைந்து வருவதும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய காப்பீடு சந்தை, உலகின் ஆறாவது பெரிய சந்தையாக உருவாகும் வாய்ப்பு இருப்பதும் ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்திய காப்பீடு துறை மொத்த பிரிமியம் அளவில் ஆண்டுக்கு 14 சதவீத வளர்ச்சி அடையும் வாய்ப்பு இருப்பதாகவும், 2032ம் ஆண்டில் ஆறாவது பெரிய சந்தையாக விளங்கும் என்றும், சுவிஸ்ரே இன்ஸ்டிடியூட்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், அந்த ஆய்வில், கடந்த ஆண்டு மொத்த பிரிமியம் அளவில் இந்தியா, உலகின் 10வது பெரிய சந்தையாக இருந்தது. ஆயுள் காப்பீடு துறையை பொறுத்தவரை, இந்த ஆண்டு 6.6 சத வளர்ச்சி அடையும் என்றும், அடுத்த ஆண்டு 7.1 சத வளர்ச்சி உண்டாகும் என்றும் தெரிவிக்கிறது. மேலும், ஆயுள் காப்பீடு அல்லாத பிரிவில், பழைய வளர்ச்சி திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம், பணவீக்கம் காரணமாக தேக்க நிலைக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Spread the love