October 4, 2022

2027க்குள் அந்த தொலைக்காட்சி பிரிவின் சந்தைப் பங்கு 50 சதத்தை தாண்டும்: கிரிசில்

மும்பை, செப்.22

வரும் 2027க்குள் அந்த தொலைக்காட்சி பிரிவின் சந்தைப் பங்கு 50 சதத்தை தாண்டும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான கிரிஸில் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரிய பேனல் தொலைக்காட்சிகளின் விலையில் 35 முதல் 40 சதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 55 அங்குல தொலைக்காட்சிகள், தற்போது ரூ.55,000-லிருந்து ரூ.65,000-க்குள் கிடைக்கின்றன. தற்போது 70-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் தொலைக்காட்சிகள் விற்பனையாகின்றன.

அத்துடன், தனிநபர் வருவாய் அதிகரிப்பதும் பெரிய திரை தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளர் திறனை அதிகரிக்கிறது. தனி நபர் வருவாய் 2018-ஆம் நிதியாண்டில் 10.9 சதமும் 2019ம் நிதியாண்டில் 9.3 சதமும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இணையதள சேவையின் தரம் அதிகரித்துள்ளது. மேலும், இணையதளப் பயன்பாட்டுக்கான செலவும் குறைந்துள்ளது.

குறிப்பாக, கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள் பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சிகளையே பெரிதும் சார்ந்திருந்தனர். இதனால், பெரிய திரையில் படங்களை துல்லியமாகப் பார்ப்பதற்காக, 40 அங்குலத்துக்கும் மேலான தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love