December 8, 2022

2025ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து
சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி

புது தில்லி, அக்.26

வரும் 2025ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஆண்டுதோறும் 25,000 டன் பசுமை ஹைட்ரஜனை உருவாக்கும் வகையில், இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிய சிங்கப்பூரின் கெப்பெல் உள்கட்டமைப்பு நிறுவனம் இந்தியாவின் க்ரீன்கோ குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரில் கையயாப்பமானது.

மேலும், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து க்ரீன்கோ குழுமத் தலைவர் மகேஷ் கோலி தெரிவித்துள்ளதாவது: 2025ம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு பசுமை எரிசக்தி ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஒப்பந்தம் கையயாப்பமாவதை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யாங் ஆகியோர் காணொலி வழியாக பார்வையிட்டனர். இந்த ஒப்பந்தத்தை வரவேற்று அமைச்சர் ஹா?தீப் சிங் புரி தெரிவித்துள்ளதாவது: கடந்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பாதையில் இணையற்ற வலிமையை இந்தியா உருவாக்கியுள்ளது. இது சந்தையில் போட்டித்தன்மை கொண்ட விலையில் பசுமை ஹைட்ரஜனை உருவாக்குவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காரணியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

Spread the love