January 23, 2023

2025ம் ஆண்டு இறுதிக்குள் சாலை விபத்துகளை 50 சதம் குறைக்க முயற்சி: கட்கரி தகவல்

புது தில்லி, ஜன.19

லாரி ஒட்டுநர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சாலை பாதுகாப்பு வாரத்தையயாட்டி தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளதாவது: சாலை விபத்துகளால் மரணங்கள் மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதை குறைக்கும் பணியில் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இதற்காக, சாலைகளின் கட்டமைப்பு, சட்டங்களை அமல்படுத்துதல், சாலை விதிகள் குறித்த விழிப்புணார்வு, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லாரி ஒட்டுநர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love