October 3, 2022

2025ம் ஆண்டுக்குள் தாராகிரி போர்க்கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்

மும்பை, செப்.12

இந்திய கடற்படையின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போர்க் கப்பலான தாராகிரி மும்பை கடலில் முதல் முறையாக இறக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) சார்பில் ஒருங்கிணைந்த கட்டுமான முறையின் கீழ் இந்தக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவு காரணமாக ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், கப்பல் வெள்ளோட்ட விழா அண்மையில் எளிமையாக நடத்தப்பட்டது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்டிஎல் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாராகிரி போர்க் கப்பலின் அடித்தளம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடந்த நிலையில், வெள்¼ளாட்டத்துக்காக கப்பல் கடலில் இறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வரும் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love