September 27, 2022

2023 சுசூகி வி ஸ்டாம் 1050டிஇ சந்தையில் அறிமுகம்

சென்னை, செப்.6

சுசூகி நிறுவனம் 2023 சுசூகி வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.

இத்துடன் எக்ஸ்டி மாடல் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய வி ஸ்டாம் 1050ம்சி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டிஇ வேரியண்ட் வி ஸ்டாம் 1050 ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களிலும் புதிய 5 இன்ச், ஃபுல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அப்-டவுன் குயிக்-´ஷிப்டர், செண்டர் ஸ்டான்டு, ஹேண்ட் கார்டு, யுஎஸ்பி, 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1037 சிசி, லிக்விட் கூல்டு, 90 டிகிரி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105.5 யஹச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மேலும், ஸ்டாண்டர்டு வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, புதிய ம்சி வேரியண்ட் ஆஃப் ரோடிங் சார்ந்து ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய வி ஸ்டாம் 1050ம்சி மாடலில் அதிக சஸ்பென்சன் டிராவல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் 6 ஆக்சிஸ் ஐஎம்யு, லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

மேலும் மேம்பட்ட ரைடு பை வயர் திராட்டில், குரூயிஸ் கண்ட்ரோல், 3 ஸ்டேஜ் டிராக்சன் கண்ட்ரோல், மூன்று பவர் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டிஇ வேரியண்டில் புதிதாக G மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆஃப் ரோடிங்கின் போது பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

Spread the love