September 27, 2022

2023க்குள் எல்லா நகரங்களுக்கும் 5ஜி சேவை ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் உறுதி

புது தில்லி, செப்.9

2023 இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளதாவது: இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து முக்கியமான பெரு நகரங்களிலும் அந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023ம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் 5ஜி தொழில்நுட்ப சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தங்களது பகுதியில் 5ஜி சேவை கிடைக்கும் என்பதை “ஏரடெல் தேங்க்ஸ்’ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

4ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது ஏர்டெல் 5ஜி தொழில்நுட்பகம் 20 முதல் 30 மடங்கு வரை அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை அளிக்கும். தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்களிடமிருக்கும் சிம் கார்கள், 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கே ஏற்ப ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் அந்த தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய கைப்பேசிகளை வாங்கினால் போதும் என்றார் அவர்.

Spread the love