December 9, 2022

2022-23ம் நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான மத்திய அரசு கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

புது தில்லி, நவ.1

2022-23ம் நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான மத்திய அரசின் மாதாந்தர கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு; 2022 செப்டம்பர் வரை மத்திய அரசு பெற்றுள்ள வருவாய் ரூ.12,03,748 கோடி (2022-23-க்கான மொத்த வருவாயாக பட்ஜெட் மதிப்பீட்டில் இது 52.7%) இந்த வருவாயில் ரூ.10,11,961 கோடி வரிவருவாய் (மத்திய அரசுக்கு நிகரம்), ரூ.1,57,600 கோடி வரியல்லாத வருவாய், ரூ.34,187 கோடி கடன் அல்லாத மூலதன வருவாய். கடன் அல்லாத மூலதன வருவாய் என்பது கடன்களை திரும்ப வசூலித்த ரூ.9,597 கோடி, பல்வகை மூலதன வருவாய் ரூ.24,590 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்த காலக்கட்டம் வரை மத்திய அரசால் வரிகளின் பங்காக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை ரூ.3,76,106 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தைவிட ரூ.1,15,960 கோடி அதிகமாகும். மத்திய அரசால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.18,23,597 கோடி (2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் இது 46.2%), இதில் ரூ.14,80,708 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,42,889 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். மொத்த வருவாய் செலவினமான ரூ.4,36,682 கோடி வட்டி வழங்கிய கணக்கிலும் ரூ.1,98,879 கோடி பெருமளவிலான மானியக் கணக்கிலும் அடங்கும்.

Spread the love