October 4, 2022

200 பழைய பயணியர் பெட்டிகள் சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, செப்.15

வாகனங்களை ஏற்றி செல்லும் வகையில், 200 பழைய பயணியர் பெட்டிகளை, சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணியை, தெற்கு ரயில்வே துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தெற்கு ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கூடுதல் சரக்குகளை கையாளுவது, பார்சல் ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக, சரக்கு ரயில்கள் வாயிலாக, பல்வேறு வகை வாகனங்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், கூடுதலாக சரக்கு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை, தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே கேரேஜில் பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர, பழைய பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை சரக்கு மற்றும் பார்சல் ரயில்களுக்கான பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் வாகனங்கள் கையாளுவது அதிகரித்து வருகிறது. இதற்காக சரக்கு பெட்டிகள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, மொத்தம் 200 பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் வகையில், சரக்கு பெட்டிகளாக வடிவமைக்க உள்¼ளாம். அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்த பணிகளை முடிக்க உள்¼ளாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love