September 27, 2022

200 சில்லரை விற்பனை கடைகளை
நாடு முழுவதும் திறக்க ஓலா திட்டம்

பெங்களூரு, செப்.19

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் பல நகரங்களில் சில்லரை விற்பனை கடைகளை திறக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் தனது ஓலா எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த ஸ்கூட்டர் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை என்பதால், நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் ஓலா எலக்ட்ரிக் சில்லரை விற்பனை மையங்களை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 200 சில்லரை விற்பனைக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஓலா செயலி மூலம் ஆன்லைனில் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது சில்லறை கடைகளை திறப்பதால் கூடுதல் விற்பனை நடைபெறும் என்று ஓலா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஓலா நிறுவனம் சமீபத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் விலையுள்ள எஸ்1 ப்ரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தாலும் அந்த ஸ்கூட்டர் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ஓலா எஸ் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் ஒரே நாளில் பத்தாயிரம் யூனிட் விற்பனையாகி சாதனை செய்தது. எனவே ஓலா நிறுவனம் எஸ் மாடல் ஸ்கூட்டரை அதிக உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Spread the love