October 4, 2022

200எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

புது தில்லி, செப்.9

மோட்டோரோலா நிறுவனம் சர்வதேச சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது: புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

இதே சென்சார் சீனாவில் கிடைக்கும் மோட்டோ எக்ஸ் 30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. 6.7 இன்ச் ஒஎல்இடி வளைந்த எட்ஜ் கொண்ட டிஸ்ப்ளே, எப்எச்டி பிளஸ் ரெசல்யூசன், 144எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 125 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புகைப்படங்களை எடுக்க 200எம்பி பிரைமரி கேமரா, ஒஐஎஸ், 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, 60 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Spread the love