September 27, 2022

20 சத ஊழியர்களை குறைக்க ஸ்னாப் முடிவு

மும்பை, செப்.2

ஸ்னாப் சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்னாப் 20 சதம் ஊழியர்களைக் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஸ்னாப் சாட் நிறுவன தலைமை நிர்வாகி ஈவன் ஸ்பிஜெல் இது குறித்து தெரிவிக்கையில், தங்களது சேவை விற்பனை தொடர்ந்து முன்னேற்றத்தில் செல்லாமல் தேக்க நிலையில் உள்ளது. எனவே தவிர்க முடியாத காரணங்களால் வருவாயும் சரிந்துள்ளது. அதனால் ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்க ஊழியர்களைக் குறைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமை கொள்கையில் திருத்தம் செய்தது. அதனால் பல்வேறு சமூக வலைத்தளங்களில் முதலீட்டாளர்களைப் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் தனியுரிமை கொள்கை திருத்தத்தால் ஸ்னாப் சாட் உள்ளிட்ட செயலிகளின் வருமானம் சரிந்துள்ளது. பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் விளம்பர வருவாயைப் பெரிதும் நம்பியுள்ளன, தனியுரிமைக் கட்டுப்பாடுகளில் ஆப்பிளின் சமீபத்திய மாற்றங்களை பேஸ்புக் வெளிப்படையாக அண்மையில் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப் சாட் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 2021-ம் ஆண்டு தான் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்தது. ஆனால் இப்போது வருவாய் இழப்பில் உள்ளது. இப்போது வருமானம் சரிந்துள்ளதால் தவிர்க முடியாமல் இந்த பணிநீக்கம் முடிவை எடுத்துள்ளது. 2021-ம் ஆண்டின் படி ஸ்னாப் சாட் நிறுவனத்தில் 5,661 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 20 சதம் வரை ஊழியர்கள் இப்போது குறைய உள்ளனர்.

Spread the love