December 9, 2022

2.60 லட்சம் வாகனங்களுக்கு
முன்பதிவு செய்துள்ளது மஹிந்திரா

மும்பை, நவ.19

மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யுவி700 மாடல்களுக்கான காத்திருப்புக் காலம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இரு கார்களை வாங்க முன்பதிவு செய்வோர் டெலிவரி எடுக்க 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இரு கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யுவி 700 மாடல்களை பெற குறைந்த பட்சம் 18 மாதங்களில் இருந்து அதிகபட்சமாக 20 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இரு கார்களை வாங்க, நவம்பர் 2022 வரை ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரம் முன்பதிவுகளை பெறுவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த மாதத்திற்கு மட்டும் மஹிந்திரா நிறுவனம் 2 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களுக்கு முன்பதிவு செய்து வருகிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் யூனிட்கள் ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் ஆகும். தொடர்ந்து காத்திருப்பு காலம் அதிகரித்து வருவதை அடுத்து உற்பத்தியை வேகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.

எனினும், இரு கார்களின் உற்பத்திக்காக எத்தனை யூனிட்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை மஹிந்திரா இதுவரை வெளியிடவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யுவி700 மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இரு மாடல்களின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love