November 29, 2022

2.5 கோடி கார் தயாரித்து மாருதி சுசூகி நிறுவனம் சாதனை

புது தில்லி, நவ.3

2.5 கோடி கார் தயாரித்து மாருதி சுசூகி நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: ஹரியாணா மாநிலம் குருகிராமில் கடந்த 1983ம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனம் தனது முதலாவது ஆலையை அமைத்தது. இதில், முதலாவது மாடலாக மாருதி 800 கார் தயாரிக்கப்பட்டது. அதன்பின் மாருதி சுசூகி நிறுவனம் 16 மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது. குருகிராம் மற்றும் மானேசர் என மொத்தம் 2 ஆலைகளில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாருதி சுசூகி நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

இந்திய மக்களுடன் சுசூகி இணைந்து 2022 உடன் 40 ஆண்டுகளாகும் நிலையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் உற்பத்தி 2.5 கோடி மைல்கல்லை தாண்டியுள்ளது. இந்த சாதனை தருணத்தில் எங்களின்பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவினால்தான் லட்சக்கணக்கான மக்களின் சொந்த கார் கனவினை நனவாக்க இவை சாத்தியமானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் மாருதி சுஸுகி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. இவைதவிர, மஹிந்திரா, கியா மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களும் கார்விற்பனையை அதிகரித்து கணிச மான சந்தைப் பங்களிப்பை கைப்பற்றி வருகின்றன.

Spread the love