December 8, 2022

2வது காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் லாபம் 25,685 கோடியாக அதிகரித்துள்ளது: நிதியமைச்சர்

புது தில்லி, நவ.8

வாராக் கடனை குறைக்கும் முயற்சிகள் பலனைத் தந்துள்ளதாகவும்; பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம், இரண்டாவது காலாண்டில் ரூ.25,685 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாராக் கடனை குறைக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன. பொதுத்துறையை சேர்ந்த 12 வங்கிகள், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து இரண்டாவது காலாண்டில், 50 சதத்துக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளன. மேலும், இந்த வங்கி களின் மொத்த லாபம் ரூ.25,685 கோடியாக உயர்வைக் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த நிகர லாபம் 32 சதம் அதிகரித்து, ரூ.40,991 கோடியாக உயர்ந்து உள்ளது.

கனரா வங்கி’யின் நிகரலாபம் 89 சதம் அதிகரித்து, ரூ.2,525 கோடியாக உயர்ந்துள்ளது. கோல்கட்டாவை சேர்ந்த யுகோ வங்கி’யின் லாபம் 145 சதம் அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ, நிகர லாபம் 74 சதம் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், ரூ.13,265 கோடி ஈட்டப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா’வின் லாபம் 58.70 சதம் உயர்ந்து, ரூ.3,312 கோடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார். மேலும், பொதுத்துறையை சேர்ந்த 12 வங்கிகளில், ‘பஞ்சாப் நேசனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா’ ஆகியவற்றின் லாபம் மட்டும் சரிவைக் கண்டுள்ளன. வாராக் கடனுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்ததை அடுத்து, இவற்றின் லாபம் சரிவைக்கண்டுள்ளன. மீதி, 10 பொதுத்துறை வங்கிகள் 13 ல் 145 சதம் வரையிலான நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Spread the love