December 8, 2022

2வது காலாண்டில் உஷா மார்ட்டின் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.522 கோடியாக அதிகரிப்பு

புது தில்லி, நவ.9

நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் கம்பி கயிறு உற்பத்தியாளரான உஷா மார்ட்டின் நிறுவனத்தின் லாபம் 7 சதம் வளர்ச்சியடைந்து ரூ.45.09 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து உஷா மார்டின் நிறுவனம் மும்பை பங்குசந்தையில் தெரிவித்துள்ளதாவது: முந்தைய நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலத்தில் இந்நிறுவனம் ரூ.42.05 கோடி நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த காலாண்டில் ரூ.434.11 கோடியிலிருந்து ரூ.522.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு ரூ.381.36 கோடியாக இருந்த செலவினங்கள் தற்போது ரூ.461.39 கோடியாக உயர்ந்துள்ளது.

உஷா மார்ட்டின் ராஞ்சி, ஹோஷியார்பூர், துபை, பாங்காக் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love