December 8, 2022

144 ஹெர்ட்ஸ் போல்டபில் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மும்பை, அக்.26

மோட்டோரோலா நிறுவனம் தனது முற்றிலும் புதிய மோட்டோரோலா ரேசர் போல்டபில் ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆகஸ்ட் மாத வாக்கில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் எப்எச்டி+ மடிக்கக்கூடிய ஓஎல்இடி ஸ்கிரீன், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2.7 இன்ச் எப்எச்டி+ வெளிப்புறம் ஓஎல்இடி ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், மேட் பினிஷ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி ஆண்ட்ராய்டு 12 50 எம்பி பிரைமரி கேமரா 13 எம்பி அல்ட்ரா வைடு + மேக்ரோ கேமரா 32 எம்பி செல்பி கேமரா கேமரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி ,3500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. புதிய மோட்டோரோலா ரேசர் 2022 ஸ்மார்ட்போன் சாடின் பிளாக் வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1119 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.98,440 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Spread the love