October 3, 2022

108எம்பி கேமராவுடன் அறிமுகமாகும்
சியோமி 12டி ஸ்மார்ட்போன்

புது தில்லி, செப்.17

சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச சந்தையில் புதிய சியோமி 12டி எனும் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:

சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமண்சிட்டி 8100 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி 12டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2712 x 1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி 12டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Spread the love