October 3, 2022

10000 ஸ்கூட்டர்களை
ஓரே நாளில் விற்பனை செய்தது ஓலா

பெங்களூரு, செப்.5

ஓலா விற்பனை விண்டோ-வை திறந்த 24 மணி நேரத்திற்குள் 10,000 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24 மணிநேரத்தில் 10000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது மட்டும் அல்லாமல், முன் பதிவு செய்யப்பட்ட இ-ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி செப்டம்பர் 7, 2022 முதல் இந்தியா முழுவதும் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஓலா எஸ் 1 முன்பதிவுகளின் அடுத்த கட்ட முன்பதிவு விண்டோ கடந்த செப்டம்பர் 2ம் தேதி தொடங்கியது.

ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான முன்பதிவுகளுக்கு, புதிய எஸ் 1 அறிமுக விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இது தவிர, ஓலா காக்கி எஸ்1 ப்ரோ என்ற லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரின் விநியோகத்தையும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய எஸ் 1 ஆனது 3 கிலோ வாட் பேட்டரி பேக்குடன் வருகிறது, மேலும் நிறுவனம் தரவுகள் படி 141 கிமீ டிரைவிங் ரேஞ்ச் ஏஆர்ஏஐ-சான்றிதழ் பெற்றுள்ளது. இ-ஸ்கூட்டர் மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லும் மற்றும் சிவப்பு, ஜெட் கருப்பு, பீங்கான் வெள்ளை, நீலம் மற்றும் திரவ வெள்ளி ஆகிய ஐந்து வண்ணங்களில் வழங்கப்படும்.

ஓலாவின் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மென்பொருளின் புதிய மூவ் ஓஎஸ் 3 இந்த ஆண்டுத் தீபாவளியன்று வெளியிடப்படும் என்றும் ஓலா எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. புதிய ஓஎஸ் ஆனது மூட்ஸ், டிஜிட்டல் கீ ஷேரிங், ப்ராக்ஸிமிட்டி அன்லாக், மேம்படுத்தப்பட்ட ரீஜென் மற்றும் இ-ஸ்கூட்டரில் ஆவணங்கள் போன்ற அம்சங்களைப் பெறும்.

Spread the love