December 9, 2022

100 நாட்களுக்குள் 1000 டெலிவரி
அச்த்தும் பிஎம்டபிள்யு ஜி310ஆர்ஆர் பைக்

சென்னை, நவ.1

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக், கடந்த ஜூலை 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.85 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கும், புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்கிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் காஸ்மெட்டிக் வி­யத்தில் மட்டுமே இரண்டு பைக்குகளும் வேறுபடுகின்றன. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கலர் ஆப்­ன்கள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கானது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் ரீ-பேட்ஜ் வெர்சன் ஆகும். அத்துடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்கனவே கூட்டணி இருந்து வருகிறது என்பதும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விசயங்களில் ஒன்று. இந்நிலையில், இந்திய சந்தையில் வெறும் 100 நாட்களுக்கு உள்ளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் டெலிவரி செய்து அசத்தியிருக்கிறது.

100 நாட்களில் 1,000 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்குகள் டெலிவரி என்பது, சராசரியாக ஒரு நாளைக்கு 10 பைக்குகள் டெலிவரி என்பதை குறிக்கிறது. அத்துடன் வரும் மாதங்களில் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கின்றன.

Spread the love