September 27, 2022

100க்கும் மேற்பட்ட ஊழியர்களை
பணிநீக்கம் செய்தது பைடான்ஸ் நிறுவனம்

பீஜிங், செப்.8

உலகம் முழுவதும் பிரபலமான ஷாட் வீடியோ செயலியான டிக்டாக்கின் உரிமையாளரான பைடான்ஸ், அதன் வீடியோ கேமிங் யூனிட்டை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்துள்ளது. இப்பிரிவில் தற்போது நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பைட் டான்ஸ் நிறுவனம், அதன் கேமிங் ஆப்ரேசன்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் பல மில்லியன் டாலர்களை முதலீடாகக் குவித்தது. ஜூன் மாதத்தில் 101 ஸ்டுடியோ மூடப்பட்ட பிறகு, ஷாங்காய்-யில் இருக்கும் வுஷிவாங் ஸ்டுடியோவை ஊழியர்கள் பணிநீக்கத்தால் முழுமையாக மூடியுள்ளது.

பைடான்ஸ் ஹாங்சோ மாவட்டத்தில் உள்ள அதன் கேம் டெவலப்மென்ட் ஸ்டுடியோவான ஜியாங்னன் ஸ்டுடியோவிலும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் பைட் டான்ஸ் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஒரு கேம் டெவலப்மெண்ட் ஸ்டுடியோவை மூடியது. கடந்த மாதம், சீனாவின் மிகப்பெரிய வீடியோ கேமிங் மற்றும் சமூக ஊடக நிறுவனமான டென்சென்ட் பொருளாதாரம் மந்தமான நிலையில் இரண்டாவது காலாண்டில் 5,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் அதன் மொத்த வர்த்தகம் மற்றும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. ஐரோப்பிய வர்த்தகத்திலும் சில பணிநீக்கம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love