December 8, 2022

ஹைதராபாத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 3,500வது விற்பனை மையம் துவக்கம்

ஹைதராபாத், நவ.19

மாருதி சுசூகி நிறுவனம், அதன் 3,500வது விற்பனை மையத்தை, ஹைதராபாதில் துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

மேலும் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 170க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை திறந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாருதியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிஷாஷி´ டக்யூச்சி தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுசூகி நிறுவனத்தை, இந்தியா முழுதும் வலிமைப்படுத்த முயற்சித்த ஊழியர்கள், டீலர்கள், கூட்டாளிகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்திய மக்களுடன் ‘சுசூகி’ தொடர்ந்து இணைப்பில் இருக்கும் 40ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சாதனை அமைந்துள்ளது. வெறும் 3 சத மக்கள் மட்டுமே, இந்தியாவில் கார் வைத்து இருக்கின்றனர். அதனால், பெரும்பாலான மக்களுக்கு, எங்கள் கார்களை வழங்கி, நிறுவனத்தின் இலக்கையும் அடைய விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Spread the love