மும்பை, ஜன.20
இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.6% அதிகரித்து, 2505 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
ஹெச்யுஎல் நிறுவனத்தின் லாபம் 2243 கோடி ரூபாய் கடந்த ஆண்டு கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லாபமானது ப்ளூம்பெர்க் ஆய்வில் 2497.90 கோடி ரூபாயாக இருந்தது. சர்வதேச நுகர்வோர் நிறுவனமான இந்த நிறுவனத்தின் வருவாயும் இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 16% அதிகரித்து, 14,986 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய் விகிதம் அழகு மற்றும் பர்சனல் கேர் துறை, ஹோம் கேர் துறை என பலவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதுவே இதன் வருவாய் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது. இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிறுவனம், பணவீக்கத்தின் தாக்கமும் உள்ளது. இதற்கிடையில் இதன் எபிட்டா நிறுவனத்தின் வட்டி பிந்தைய வருவாய், வரி, தேய்மானம் சேர்த்து 3537 கோடி ரூபாயாக இருந்தது. இதன் எபிட்டா மார்ஜின் விகிதம் 23.6% ஆக குறைந்துள்ளது.
பிரிவு வாரியாக பார்க்கும்போது ஹோம் கேர் பொருட்கள் பிரிவில் 32% வளர்ச்சியும், இதே அழகு மற்றும் பர்சனல் கேர் பிரிவில் 10% வளர்ச்சியும் கண்டுள்ளது. இதற்கிடையில் உணவு மற்றும் புத்துணர்ச்சி தரும் பொருட்கள் பிரிவில் வளர்ச்சி விகிதமானது 7% ஆகவும் இருந்தது. இதில் உணவுகள், காபி மற்றும் ஐஸ்கிரீம் பிரிவு வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.