September 27, 2022

ஹூண்டாய் வென்யூ என் லைன்
இந்திய சந்தையில் அறிமுகம்

சென்னை, செப்.6

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ என் லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ என் லைன் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் வென்யூ என் லைன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 15 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி-இன் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக புதிய என் லைன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் இந்திய சந்தையில் இது ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது என் லைன் மாடல் ஆகும்.

புதிய வென்யூ என் லைன் மாடலின் வெளிப்புறம் டார்க் க்ரோம் கிரில், ரூப் ரெயில்கள், பம்ப்பர் பெண்டர், சைடு சில் உள்ளிட்டவைகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் கிரில் மீது என் லைன் சின்னம் இடம்பெற்று இருக்கிறது.

உள்புறம் பிளாக் நிற இண்டீரியர், ரெட் அக்செண்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், புளூ லின்க் கனெக்டிவிட்டி, அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், லெதர் இருக்கைகள் மற்றும் என் லைன் பிராண்டிங் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பேடில் ஷிப்டர்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஓடிஏ அப்டேட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிவைஸ்டு ஸ்டீரிங் மற்றும் சஸ்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

Spread the love