November 29, 2022

ஹீரோ மோட்டோகார்ப் மொத்த விற்பனை சரிவு

சென்னை, நவ.11

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மாத மொத்த விற்பனை சரிவைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,54,582-ஆக இருந்தது. இது, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திய மொத்த விற்பனையான 5,47,970-உடன் ஒப்பிடுகையில் 17 சதம் குறைவாகும்.

மேலும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 16 சதம் சரிந்து 4,42,825-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 5,27,779-ஆக இருந்தது. பண்டிகைக் காலத்தையயாட்டி கடந்த மாதத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை அமோகமாக இருந்தாலும், விநியோகஸ்தர்களிடம் நிறுவனம் செய்த மொத்த விற்பனை குறைவாகவே இருந்தது. ஏற்றுமதியைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20,191 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது 11,757-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love