October 4, 2022

ஹீரோ மோட்டோகார்ப்-எச்பிசிஎல் கூட்டு

புது தில்லி, செப்.21

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எச்பிசிஎல், நிறுவனத்துடன் இணைந்து, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை ஏற்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து, முதல் கட்டமாக, பெட்ரோல் நிலையங்களில், சார்ஜிங் அமைப்பை ஏற்படுத்த உள்ளன. முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும் என்றும்; தொடர்ந்து, பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சார்ஜிங் செயல்பாடுகள், முழுக்க முழுக்க ரொக்கமில்லா பணப்பரிமாற்ற முறையில், ஹீரோ மோட்டோகார்ப் மொபைல் செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு, நாடு முழுக்க, கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன.

Spread the love