February 2, 2023

ஹாப் நிறுவனத்தின் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

பெங்களூரு, ஜன.19

ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பீடு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹாப் எலெக்ட்ரிக் நிறுவன வழக்கப்படி குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முற்றிலும் புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 120 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் ஹை ஸ்பீடு வேரியண்ட் எஃப்ளோ தொழில்நுட்பம், 72 வோல்ட் ஆர்கிடெக்ச்சரில் கிடைக்கும். இதில் உள்ள மோட்டார் 2200 வாட் பீக் பவர் மற்றும் 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இது எண்ட்ரி லெவல் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். இதில் உள்ள பிஎல்டிசி ஹப் மோட்டார் எஃப்ஒசி வெக்டார் கண்ட்ரோல் உடன் சேர்ந்து ஸ்கூட்டரை எளிமையாக கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. இதில் உள்ள பேட்டரியை 850 வாட் ஸ்மார்ட் சார்ஜர் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். இதில் உள்ள மேம்பட்ட லித்தியம் அயன் பேட்டரி, அதிக செயல்திறன் மற்றும் நீண்ட காலம் உழைக்கும். 2.1 கிலோவாட் ஹவர் பேட்டரியில் அதிக மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது. இத்துடன் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக் சிஸ்டம், ரிஜெனரேடிவ் பிரேகிங் போன்ற வசதிகள் உள்ளன.

Spread the love