November 29, 2022

ஹாப் ஆக்சோ புதிய மின்சார பைக்
டிசம்பர் மாதத்தில் விநியோகம் துவக்கம்

புது தில்லி, நவ.15

ஹாப் ஆக்சோ எனும் புதிய மின்சார பைக், தில்லி, புனே என 50க்கும் மேற்பட்ட நகரங்களில், டெஸ்ட் டிரைவ்வுக்கு வந்துள்ளதாக ஹாப் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்த பைக், கடந்த செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் வெளியானது. அறிமுகமான இரண்டே மாதங்களில், 6000த்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரிப்புகளும் வந்துள்ளதாக ஹாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் கேதன் மெஹ்தா தெரிவித்துள்ளதாவது: மக்களின் சிறப்பான வரவேற்புக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்களாக இருப்போம் என்றும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின், ‘பேம் 2’ விதிமுறைகள் மாற்றத்தாலும், புதிய சோதனைகள் மற்றும் பாதுகாப்பு தரத்திற்கான கடுமையான விதிமுறைகளாலும், வினியோகம் டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love