October 4, 2022

ஹானர் பேட் 8 இந்திய சந்தையில் அறிமுகம்

மும்பை, செப்.22

ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் 12 இன்ச் 2கே எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

இத்துடன் 5 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 6.9 மில்லிமீட்டர் அளவில் மெட்டல் பாடி கொண்டிருக்கும் ஹானர் பேட் 8 மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள், ஹானர் உருவாக்கிய ஹிஸ்டன் ஆடியோ டியுனிங், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும், இத்துடன் 7250 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. ஹானர் பேட் 8 மாடல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 ஆகும்.

Spread the love