October 3, 2022

ஸ்டோர்களை குறைக்க பெட்எகஸ் திட்டம்

நியூயார்க், செப்.20

பெட்எக்ஸ் ஸ்டோர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதையும் தற்காலிகமாக நிறுத்துதவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:
அமெரிக்காவின் முன்னணி கொரியர் டெலிவரி சேவை நிறுவனமான பெட்எக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில் செய்தி நிறுவனங்கனிடம் அவர் தெரிவித்துள்ளதாவது: முதல் காலாண்டில் தங்களது ´ப்மெண்ட் எண்ணிக்கை சரிந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் குறைந்தது 90 பெட்எக்ஸ் அலுவலகங்கள் மற்றும் 5 கார்ப்ரேட் அலுவலகங்களையும் ஃபெட் எக்ஸ் மூட உள்ளது. மேலும் ஞாயிறு சேவைகளையும் குறைக்க முடிவு செய்துள்ளது.

ரெசசனுக்கு பெட்எக்ஸ் தயாராகி வருகிறதா என ராஜ் சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பிய போது, அப்படிதான் நினைக்கிறேன். உங்களுக்கும் தெரியும் இந்த எண்கள் நன்றாக இல்லை.” என தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த நிறுவனத்தின் ஆர்டர்கள் மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந் நிறுவனம் எதிர்பார்த்ததை விட 300 மில்லியன் டாலர் வருமான சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்எக்ஸ் நிறுவனம் பெரும்பாலும் அமெரிக்காவில் இ-காமர்ஸ் டெலிவரியை செய்து வருகிறது. ஐரோப்பிய மற்றும் ஆசிய வணிகத்திலும் சரிவை சந்தித்துள்ளது.

Spread the love