September 27, 2022

ஸ்டார்பக்ஸ்’ சிஇஓவாக லக்ஷ்மண் நரசிம்மன் நியமனம்

புது தில்லி, செப்.3

பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, அமெரிக்கா வாழ் இந்தியரான லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புனே பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டதாரியான லக்ஷ்மன் நரசிம்மன், இதற்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த ரெக்கிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சமீப காலமாக, உலகளவிலான பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, ஐபிஎம் நிறுவனத்தில் அர்விந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாராயண் என, பலர் உலகளாவிய நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இந்த வரிசையில், தற்போது 55 வயதாகும் லக்ஷ்மன் நரசிம்மனும் இணைந்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துக்கு, உலகம் முழுதும் மொத்தம் 34 ஆயிரம் ஸ்டோர்கள் உள்ளன. மேலும், லக்ஷ்மன் நரசிம்மன், அக்டோபர் முதல் தேதியில்இருந்து பணியில் சேர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love